உலகம்

சீனப் பெண்ணுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி! 

DIN

சீனப் பெண்ணுக்கு மனிதர்களுக்குப் பரவும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஜனவரி 31 உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பிப்வரி 24 அன்று பெண்ணுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது அதிகாரப்பூர்வாக தெரிய வந்தது. 

முன்னதாக, கம்போடியாவில் 11 வயது சிறுமி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A (H5N1) வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து இது வந்துள்ளது. அவரது பாதிக்கப்பட்ட தந்தை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய 11 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

எச்5என்1 பறவைக் காய்ச்சல் மனித ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்

1997ல் சீனாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன. 

பறவைக் காய்ச்சல் எனப்படும்  ஹச்5என்1 வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிமோனியா காய்ச்சலை இரு உருவாக்கும். 

கம்போடியாவில் 2003 முதல் 2014 வரை 56 பேர் ஹச்5என்1 (H5N1) வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 37 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT