உலகம்

அமெரிக்கா, தென் கொரியாவுக்கு வட கொரியா அதிபரின் சகோதரி எச்சரிக்கை

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தங்களது நாடு தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் ஜோ-ஜாங் எச்சரித்துள்ளாா்.

DIN

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தங்களது நாடு தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் ஜோ-ஜாங் எச்சரித்துள்ளாா்.

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தங்களது பி-52 குண்டுவீச்சு விமானத்தை கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா திங்கள்கிழமை பறக்கவிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிம் ஜோ-ஜாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்கப் படை மற்றும் அதன் கைப்பாவையான தென் கொரிய ராணுவத்தின் இடைவிடாத ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தேவைப்படும் சூழல் வரும்போது அந்த இரு நாடுகளுக்கும் எதிராக மிகத் துரிமாகவும், சமாளிக்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, தங்கள் மீதான படையெடுப்புக்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுவதால் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

SCROLL FOR NEXT