உலகம்

இம்ரான் கான் இன்று கைது செய்யப்படலாம்

ANI

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் காவல்துறை இன்று கைது செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றங்களின் உத்தரவுகளைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் காவல்துறை அடுத்த 24 மணி நேரத்தில் ஜமான் பூங்காவிற்குச் சென்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்று கைது செய்யும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்த நிலையில், இன்று கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியின்போது, காவல்துறை அதிகாரிகளையும் நீதித்துறையையும் "பயங்கரமான" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காக இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT