உலகம்

இயற்கையின் அரிதான நிகழ்வு: இரண்டாகப் பிரியும் ஆப்பிரிகா

DIN


இயற்கையின் அரிதான நிகழ்வாக, ஆப்பிரிகா கண்டம் இரண்டாகப் பிரிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கண்டங்களுக்கு இடையே, புதிய கடல் பகுதி ஒன்றும் சப்தமில்லாமல் உருவாகி வருகிறது.

இயற்கையின் மிக அரிய நிகழ்வாக, ஆப்பிரிகா இரண்டாகப் பிரியத் தொடங்கியிருக்கிறது. இரண்டாகப் பிரியும் பகுதிகளுக்கு இடையே உருவாகி வரும் கடலின் அளவு வருங்காலத்தில் அதிகரித்து, இரண்டு தனித்தனிப் பகுதியாகவே மாறும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளாக ஒன்றாக நிலப்பரப்பையும் கடல் பரப்பையும் பகிர்ந்துகொண்டிருக்கும் ஸாம்பியா மற்றும் உகாண்டா எதிர்காலத்தில் தனித்தனி கடற்பரப்புகளை பெறும் என்று கூறப்படுகிறது.

ஒரு நில அடுக்கானது இரண்டாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட நில அடுக்குகளாக பிரிவதை அறிவியல் முறையில் பிளவு எனப்படுகிறது. இந்தப் பிளவானது நிலப்பரப்பு மற்றும் கடல்பரப்புகளிலும் நேரிடும். 

இதற்கு முன்பும் 13.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிகா கண்டங்களும் இதுபோன்று பிரிந்துதான் இரண்டு கண்டங்களாக உருவாகியிருக்கக் கூடும் என்கிறது புவியியல் ஆய்வுகள்.

அதுபோல, இன்னும் சில லட்சம் ஆண்டுகளில், ஆப்பிரிகாவும் சமமில்லாத இரண்டு துண்டுகளாகப் பிரிந்து, அதற்கு இடையே புதிய கடல் பரப்பு உருவாகும் என்றும், இது குறைந்தது 50 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகளில் நடக்கலாம் என்கிறார்கள். சிறிய பரப்பாகப் பிரியும் பகுதியில் சோமாளியா, கென்யாவின் ஒரு பகுதி மற்றும் எத்தியோப்பியா, தான்சானியா நாடுகள் அடங்கியிருக்கும்.

அதாவது, எத்தியோப்பியா பாலைவனப் பகுதியில் இந்த நில பிளவு உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி வருகிறது. இந்த பிளவுக்குள் கடல் தண்ணீர் புகுந்து, புதிய கடலாக மாறும் என்றும், இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் தனித்தனியாகப் பிரியத் தொடங்கிவிட்டதாகவும், இதனை சாதாரணமாகப் பார்த்தாலே தெரியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த பிளவு ஒரேயடியாக நடக்கப்போவதில்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இயற்கைப் பேரழிவான சுனாமி, நிலநடுக்கம் போன்றவை கடுமையாக இப்பகுதியை தாக்கினால், ஒருவேளை இது வேகமாக மாறும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

SCROLL FOR NEXT