டெஸ்லா காருடன் நிக் கிர்கியோஸ் 
உலகம்

பிரபல டென்னிஸ் வீரரின் டெஸ்லா கார் திருட்டு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நிக் கிர்கியோஸின் டெஸ்லா காரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் திருடிச்சென்றுள்ளார். 

DIN


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நிக் கிர்கியோஸின் டெஸ்லா காரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் திருடிச்சென்றுள்ளார். 

நிக் கிர்கியோஸின் தாயாரிடம் துப்பாக்கி காட்டி காரைத் திருடிச்சென்ற நபரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரத்தில் வசித்து வருபவர் பிரபல டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ். இவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒருவர்  நிக் கிர்கியோஸின் தாயாரிடம் துப்பாக்கி காட்டி டெஸ்லா காரின் சாவியைக் கேட்டுள்ளார். மேலும் காரை எப்படி இயக்குவது என்பதையும் தாயாரிடமே கேட்டு காரை திருடிச்சென்றுள்ளார். 

துப்பாக்கி முனையில் இருந்த கிர்கியோஸின் தாயார், உதவிகோரி கத்தியுள்ளார். டெஸ்லா செயலியை பயன்படுத்திவந்த கிர்கியோஸுக்கு கார் திருடுபோனது தெரியவந்துள்ளது. உடனடியாக வீட்டிற்கு வந்து காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். 

டெஸ்லா செயலியின் உதவியுடன் கார் இருந்த இருந்த இடத்தை கண்டறிந்த காவல் துறையினர், காரை திருடியவரைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

நிக் கிர்கியோஸின் டெஸ்லா கார் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி (1.56 கோடி) மதிப்புடையது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பூக்குழியில் தவறி விழுந்த பெண் மீட்பு

வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் வேதனை

பிகாரில் 7.42 கோடி வாக்காளா்கள்: வரைவுப் பட்டியலில் இருந்ததைவிட 17.87 லட்சம் கூடுதல்

SCROLL FOR NEXT