உலகம்

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதல்: 14 பேர் பலி, 25 பேர் காயம்!

DIN

தென்மேற்கு எகிப்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் புதன்கிழமை பிற்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றதாக, மாகாண ஆளுநர் மொஹமட் எல்-ஜமூத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்தார். 

சம்பவ இடத்துக்கு 17 ஆம்புலன்ஸ்கள் வந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

45 பேருடன் தலைநகர் கெய்ரோ நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்த டிரக்கின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

எகிப்தில் மோசமான போக்குவரத்து சாலைகள் உள்ள நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

SCROLL FOR NEXT