கோப்புப் படம். 
உலகம்

தனக்குத்தானே குழிதோண்டிக்கொண்ட ஜகார்த்தா

தலைநகர் சந்தித்துவரும் பல்வேறு இன்னல்களால், இந்தோனேசியா தனது தலைநகரை மாற்றும் முடிவில் தீவிரம் காட்டி வருகிறது.

DIN


இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா தற்போது கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே தலைநகர் சந்தித்துவரும் பல்வேறு இன்னல்களால், இந்தோனேசியா தனது தலைநகரை மாற்றும் முடிவில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும், ஜகார்த்தாவின் 20 செ.மீ. பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிவிட்டது. கடல் நீர்மட்டம் ஓராண்டுக்கு சராசரியாக 0.5 செ.மீ. அளவுக்கு அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், ஜகார்த்தாவில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜகார்த்தா கடலுக்குள் மூழ்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அதற்கு ஏற்றாற்போல, கடந்த சில ஆண்டுகளாக ஜகார்த்தாவில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு காலத்தில் வெறும் 2 வெள்ளப்பெருக்கும், 1960ஆம் ஆண்டு காலத்தில் இது 5 ஆக அதிகரித்த நிலையில், 2010ல் வெள்ளப்பெருக்கு 10 ஆனது.

ஜகார்த்தா இவ்வாறு கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கு நான்கு காரணிகளை பொறியாளர்களும், புவியியல் நிபுணர்களும் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, நிலத்தடி நீர்மட்டம் வறண்டுபோனது, அதிகப்படியான கட்டடங்களால் அழுத்தம், நிலப்பரப்பில் அதிகப்படியாக இருக்கும் தளர்வான வண்டல் மண்ணில் ஏற்பட்ட இறுக்கம், புவித்தட்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இதற்கக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

ஆனால், இதில் முக்கியமானதாக, நிலத்தடி நீர் வறண்டதும், அதிகப்படியான கட்டடங்களின் அழுத்தமுமே என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT