உலகம்

செயல்படாத கணக்குகளை நீக்கும் கூகுள்! 

DIN

டிசம்பரில் இருந்து செயல்படாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.

கூகுள் நிறுவனம் செயல்படாத கணக்குகளுக்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது.  இந்த புதிய கொள்கை அனைத்து கூகுள் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழைந்திருக்காத(log in) தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கான கொள்கையை கூகுள் நிறுவனம் மாற்றியுள்ளது.

2 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் உள்ள கணக்கு மற்றும் மின்னஞ்சல்கள், கோப்புகள், விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.

இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வணிகம், கல்வி உள்ளிட்ட நிறுவன கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கணக்குகளை நீக்கும் முன்பு செயல்படாத மின் அஞ்சல் முகவரிக்கு கூகுளில் இருந்து கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை மின் அஞ்சலை கூகுள் நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை கூகுள் நிறுவனம் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் நிறைவு: இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாட்டுச் சந்தை

14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை: ஆட்சியா்

கோபியில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு

காற்று, மழையால் 120 ஹெக்டோ் வாழை மரங்கள் சேதம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT