உலகம்

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி!

DIN

ஜப்பான் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். 

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்று(வெள்ளிக்கிழமை) சென்ற அவர், 

இப்பயணத்தின்போது, ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். 

இதனிடையே இன்று(சனிக்கிழமை) காலை ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மலர் தூவி மரியாதை. செலுத்தினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'ஹிரோஷிமாவில் உள்ள இந்த சிலை ஒரு முக்கியமான செய்தியை அளிக்கிறது. அமைதி மற்றும் நல்லிணக்கம் என காந்திய லட்சியங்கள் உலகளவில் எதிரொலிக்கிறது, கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT