உலகம்

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!

வாட்ஸ்ஆப் செயலி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

மெட்டா குழுமத்தின் அங்கமான வாட்ஸ்ஆப் செயலி, புதிய சேவைகளைச் சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்ஆப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையதளம் தெரிவிக்கிறது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது.

தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT