உலகம்

பிக் பாஸ் பாணியில் பாலஸ்தீன கைதிகளுக்குத் தண்டனை: வைரலாகும் விடியோ!

பாலஸ்தீன கைதிகள் ஒரே பாடலைத் தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு கேட்க வைக்கப்பட்டுள்ளனர்.

DIN

இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகளுக்கு நூதன தண்டனையாக ஒரே பாடலைத் திரும்ப திரும்ப பல மணி நேரம் கேட்க வைக்கப்பட்டதாக வெளியான வீடியோ வைரலாகியுள்ளது.

அதே பாணியில் இஸ்ரேலிய மக்கள் பலரும் விடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

போர், ஒருபுறம் பல்லாயிர உயிர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிற வேளையில் மற்றொரு புறம் கொண்டாட்டத்துக்கான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தொடரில், விளையாட்டு போட்டியாக, ஒரு பாடலின் குறிப்பிட்ட வார்த்தையைத் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் கேட்கும் சவால் போட்டியாளர்களுக்குத் தரப்பட்டது.

அதே பாணியில் இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனர்களை 8 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே பாடலைக் கேட்க வைத்த விடியோ வெளியானது.

அந்த விடியோவில் பாலஸ்தீன கைதிகளின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டுள்ளன. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.

பாடகர் மேனி மம்தேரா என்பவர் எழுதிய ‘மம்தேரா ஐயம் மம்தேரா’ என்கிற பாடல் அது.

8 மணி நேரம் ஒலிக்க விடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருப்பினும் விடியோ வைரலானதைத் தொடர்ந்து இஸ்ரேலிய மக்கள் பலரும் அதே போல விடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

பாடகர் மம்தேரா ராணுவ தளத்துக்கு சென்று உற்சாகப்படுத்தும் வகையில் வைரலான பாடலைப் பாடியுள்ளார்.

மனிதநேய ஆர்வலர்கள், இந்தச் சூழல் ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT