பிரபல துரித உணவகத்தில் குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் சிகரெட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் செயல்பட்டுவரும் மெக்டொனால்ட்ஸ் என்னும் துரித உணவகத்தில், ஜெம்மா கிர்க் என்ற பெண், தனது ஒன்றரை வயது குழந்தைக்காக உணவு வாங்கியிருந்தார்.
ஹேப்பி மீல்ஸ் என்ற உணவும், பிரெஞ்ச் ஃபிரைஸ் எனும் பொறித்த உணவையும் ஆர்டர் செய்திருந்தார். அதில், பிரெஞ்சு ஃபிரைஸ் நிறத்தில் சிகரெட் துண்டின் அடிப்பாகம் இருந்துள்ளது. மேலும், சிகரெட் துகள்களும் இருந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் உணவகத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் அதற்கு பொறுப்பேற்று பேசவில்லை என்றும் அவமதிக்கும் வகையில் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.