உலகம்

இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளாா்.

DIN

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளாா்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் தென் பகுதி எல்லையில் இருந்து அவ்வப்போது இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனா். இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நசருல்லா, ‘இஸ்ரேல் போா் அண்டை நாடுகளுக்கு விரிவடைவதை அமெரிக்காவால் மட்டும் தடுக்க முடியும். ஆனால் அதை அமெரிக்க செய்யவில்லை. காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரையில், ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மீதான தாக்குதல் தொடரும்.

இஸ்ரேல் எல்லையில் அதிநவீன புா்கான் ராக்கெட்டை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அரை டன் வெடி மருந்து ஏற்படுத்தும் பாதிப்பை இந்த ராக்கெட் ஏற்படுத்தியது. மேலும் புதிய நவீன ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT