காட்டுத்தீயை அணைக்க முயற்சிக்கும் ஹெலிகாப்டர் 
உலகம்

ஹவாய் தீவில் மற்றுமொரு காட்டுத் தீ!

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

DIN

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கோ குடியிருப்பு பகுதிகளிலோ பாதிப்பு ஏற்படவில்லை. 

கடந்த மாதம்தான், இந்த மழைக்காடுகளில் 99 பேரைப் பலியாக்கிய காட்டுத்தீ விபத்து நிகழ்ந்தது. 

ஓஹூ பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு இருக்கலாம். இதுவரை காட்டுத்தீ ஏற்படாத மழைக்காடுகள் கூட தீக்கு இரையாவது அபாயமான சூழலாகக் கருதப்படுகிறது. 

பசுமை செறிந்துள்ள ஓஹூ தேசிய சரணாலயம், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரிகள் என அமெரிக்கா அறிவித்திருந்த 22 உயிரினங்களுக்கான புகலிடமாக உள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட உயிரினங்களும் தாவரினங்களும் இந்தப் பகுதியில் மட்டும் காணக் கூடியவை.

இப்போது ஏற்பட்ட காட்டுத் தீயினால் என்னென்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளன என இன்னும் அறிய இயலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் சிறை

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

SCROLL FOR NEXT