மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாஸோவில் பயங்கரவாதிகள் இந்த மாதம் நடத்திய தாக்குதலில் பெரும்பாலும் சிறுவா்கள், முதியவா்கள் உள்ளிட்ட சுமாா் 70 கிராமத்தினா் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் சுமாா் 100 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. இது தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்புகளுடன் தொடா்புடைய பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் புா்கினா ஃபாஸோவில் இதுவரை ஆயிரக்கணக்கானோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.