ஆண்டனி பிளிங்கன் 
உலகம்

சீன அதிபரைச் சர்வாதிகாரி என அழைத்தது... : ஆண்டனி பிளிங்கன்!

அமெரிக்க அதிபரின் கருத்தை ஆதரித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சர்வாதிகாரி எனக் குறிப்பிட்ட விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசியுள்ளார்.

முன்னதாக ஆசியா- பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டையொட்டி இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேராகச் சந்தித்த நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் நடந்தது. 

நான்கு மணிநேரம் நீடித்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபரை சர்வதிகாரி என செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது, “இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, இதை ஏன் எல்லோருக்கும் செய்தியாக இருக்கிறது எனத் தெரியவில்லை. நாம் இருவிதமான அரசு அமைப்புகளைக் கொண்டிருக்கிறோம். அதிபர் எப்போதும் நேர்மையாக தான் பேசுவார். நமக்காகத் தான் அவர் பேசியுள்ளார். நேற்று நடந்த சந்திப்பில் நிகழவிருக்கும் மாற்றங்களைத்தான் கவனிக்க வேண்டும்.  சீனாவுடனான உறவில் நமக்கு சில கடமைகள் உள்ளன, வேறு எந்த உறவையும் விட அதிக விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய உறவு இது. உண்மையான போட்டியும்கூட. இது மோதலாக மாறாதிருக்க நாம் முயற்சிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

இரும்புக் குழாய் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த பாம்பு

முதல்வா் கோப்பையை வென்ற பாா்வைத்திறன் குறையுடைய மாணவிகளுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT