பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவா பெண்!
எல் சால்வடாரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகராகுவாவைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றிபெற்றார்
நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.
எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றி பெற்றார்.
ஷென்னிஸ் பலாசியஸ்-க்கு 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவின் கேப்ரியல் முடிசூட்டினார்.
Advertisement
Advertisement
72வது பிரபஞ்ச அழகி போட்டி எல் சால்வடாரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
சான் சால்வடாரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் நிகராகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் நுழைந்தனர்.
இதையும் படிக்க: ம.பி. பாஜக வேட்பாளர் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு: திக்விஜய் சிங் போராட்டம்
முன்னதாக, இந்தியப் போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதிபெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தார். இருப்பினும், நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.
குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற முதல் திருமணமான பெண்கள் ஆவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.