காஸாவில் உணவு பெற காத்திருக்கும் குழந்தைகள்... 
உலகம்

காஸாவில் உணவின்றித் தவிக்கும் 22 லட்சம் பேர்: ஐ.நா. கவலை

காஸாவில் 22 லட்சம் பேருக்கு உணவுத் தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. 

DIN

காஸாவில் 22 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. 

கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. 

காஸா நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்து வரும் நிலையில் ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 

மேலும் அங்கு மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவரசம்... பாயல் ராஜ்பூத்!

ரெட் ஹாட்... நிதி அகர்வால்!

Online-ல போலீஸ் அழைப்பா? கவனமா இருங்க! இது Digital Arrest Trap!

விபத்துக்குள்ளான விஜய் தேவரகொண்டாவின் கார்!

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடஸ் பென்ஸ்!

SCROLL FOR NEXT