உலகம்

ஹவாய் அருகே ஒன்பது வீரர்களுடன் கடலில் பாய்ந்த ராணுவ விமானம்

DIN

ஹவாயின் கடற்படை தளத்தின் அருகே ராணுவ விமானம் தரையிறங்கும்போது திடீரென பாதைமாறி ஓடுதளத்தை தாண்டிச் சென்று கடலில் விழுந்தது.

விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்களும் கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹவாய் தீவுகளில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதைமாறி ஓடுதளத்தை தாண்டிச் சென்று கடலில் பாய்ந்தது. கடற்கரைக்கு அருகிலேயே விமானம் விழுந்ததால் மூழ்காமல் இருந்தது. 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. இதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

ராணுவ கண்காணிப்பிற்காக இந்த பி8 போஸேடான் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 737 ஜெட் விமானங்களைப் போன்றே வடிவமைப்பு கொண்ட இந்த விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மோசமான வானிலை மற்றும் மிகச்சிறிய ஓடுதளம் ஆகியவை இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று விமான வல்லுநர் பீட்டர் ஃபோர்மன் கூறினார். 

மேலும் விமான ஓட்டுநர் விமானத்தை எங்கு இறக்கத் தொடங்கியிருக்க வேண்டுமோ அங்கு தவற விட்டிருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்து இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

SCROLL FOR NEXT