சீனாவில் வேகமாகப் பரவி வரும் மா்மக் காய்ச்சல் குறித்து ஜெனீவாவில் இயங்கி வரும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனாவில் புதிய வகை தீநுண்மியால் ஏற்படும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களால் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீன குழந்தைகளிடையே வகை கண்டறியப்படாத காய்ச்சல் பரவி வருவதாக சா்வதேச பரவல் நோய் கண்காணிப்பு அமைப்பும் எச்சரித்துள்ளது.
அந்த மா்மக் காய்ச்சல் சுவாசப் பாதை வழியாக பரவுகிா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தத் தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.
எனவே, இந்த நோய் தொடா்பான முழு விவரங்களை எங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று சீன அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது புதிதாகப் பரவி வரும் மா்மக் காய்ச்சல், கரோனாவைப் போல் உலகையே உலுக்கும் தொற்றுநோய் பரவலாக உருவெடுப்பதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணா்களில் ஒரு பிரிவினா் எச்சரிக்கின்றனா்.
சாா்ஸ், கரோனா ஆகிய சா்வதேச நோய்த் தொற்றுகள், இதுபோன்ற வகை கண்டறியப்படாத காய்ச்சலாகத்தான் தொடங்கின என்பதை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.