மோகன் பகவத் (கோப்புப் படம்) 
உலகம்

உலக அமைதிக்குப் பாரதம் வழிகாட்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்வுக்கான வழியை இந்தியா காட்டியுள்ளதாகத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

DIN

தாய்லாந்து தலைநகரில் நடைபெற்று வரும் உலக இந்து இயக்க மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் ஒன்றுபடவும் அதன் மூலம் உலகை இணைக்கவும் அறிவுறுத்தி பேசியுள்ளார்.

மாநாட்டின் உரையில் அவர் தெரிவித்தாவது:

நாம் அனைத்து இந்து மதத்தினரையும் ஒன்றுபடுத்த வேண்டும். இந்துக்கள் இணைந்து உலகத்தில் உள்ள எல்லோரையும் இணைக்க வேண்டும். இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் சேரும்போது உலகத்தை இணைக்கிற வேலையும் தொடங்கிவிடும்.

இன்றைய உலகம் திணறி வருகிறது. 2000 ஆண்டுகளாக மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதியை அடைய பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன. பொருள்முதல்வாதம், பொதுவுடமை, முதலாளித்துவம் வழியாக முயற்சி செய்திருக்கிறார்கள். பொருள் வளம் தான் செழிப்பு என அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆனால் அதில் நிறைவு இல்லை. கரோனாவுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதம் அவர்களுக்கு வழியைக் காட்டும் என ஒருமனதாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நாம் எல்லோரையும் சென்று சேர வேண்டும், இந்து மதத்தினர் இணைந்து நமது சேவையின் மூலம் மற்றவர்களை இணைக்க வேண்டும். நமக்கு அந்த ஆற்றல் உள்ளது. சுயநலமற்ற சேவையில் உலகின் விளிம்பில் நாம் நிற்கிறோம். நமது பண்பாடு மற்றும் மதிப்பீடுகள் அவை. ஆகவே சென்று சேருங்கள், அவர்களின் இதயத்தை வெல்லுங்கள் என அவர் பேசியுள்ளார்.

மேலும், நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT