ஐநா முகாமில் உள்ள பாலஸ்தீன குழந்தைகள் 
உலகம்

போர் நிறுத்தம் இன்று முதல் தொடங்கும்: கத்தார்

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் தற்காலிக போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

DIN

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுக்குமிடையே ஏழு வாரங்களாக மேலாகத் தொடர்ந்துவரும் போரில், தற்காலிக போர் நிறுத்தம் இன்று (நவ.24) அதிகாலை முதல் அமலாகவுள்ளதாகக் கத்தார் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் உடன்படிக்கையின்பேரில் இரு தரப்பும் பரஸ்பரம் கைதிகளை விடுவிக்கவும் நான்கு நாள்களுக்குப் போர் நிறுத்தத்துக்கும் ஒப்புக் கொண்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) தொடங்கவிருந்த போர் நிறுத்தம், காரணமின்றி தள்ளி வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை போர் நிறுத்தம் அமலாக்கப்படாது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 7 மணி முதல் போர் நிறுத்தம் அமலாகும் என கத்தார் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம்

முதல்கட்டமாக, ஹமாஸ் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட 13 இஸ்ரேல் பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் விடுவிக்கும் பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு பிணைக்கைதிக்கு 3 பாலஸ்தீன அகதிகள் வீதம் இஸ்ரேல் விடுவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இந்தியா் சுட்டுக்கொலை!

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ராஜபாளையத்தில் பலத்த மழை

கஞ்சா விற்றதாக மூதாட்டி கைது

ராஜபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT