முகப்பு
உலகம்

இளம் தலைமுறையினர் திரையுலகிற்குள் நுழையவேண்டாம் : பிரபல ஹாலிவுட் நடிகை அறிவுரை!

இளம் வயதில் திரையுலகிற்குள் நுழைய விரும்ப வேண்டாம் என ஹாலிவுட் நடிகை நட்டாலி போர்ட்மன் அறிவுரை கூறியுள்ளார் .

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
நட்டாலி போர்ட்மன்
பகிர்:

பிரபல ஹாலிவுட் நடிகை நட்டாலி போர்ட்மன், திரையுலகத்திற்குள் நுழைய குழந்தைகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இந்தக் கவர்ச்சிகரமான உலகிற்குள் நுழைய விரும்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

நட்டாலி போர்ட்மன், 42 வயது நிரம்பிய ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஸ்டார் வார்ஸ், தோர் ஆகிய உலகளவில் பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வலையொளி ஒன்றில் பேசிய நட்டாலி, இந்தத்துறையில் நான் இளம் வயதில் எந்தப் பாதிப்பும் அடையாமல் தப்பித்தது அதிர்ஷ்டகரமான விபத்து எனக் கூறியுள்ளார்.

அதற்கு எனது பெற்றோர்தான் காரணம் எனவும் கூறினார். இந்தத் துறையில் நடக்கும் பல மோசமான சம்பவங்கள் பற்றிய கதைகளை நான் கேட்டிருக்கிறேன், எனவே குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இது வேண்டாம் என நினைக்கிறேன் என்றுள்ளார். 

13 வயதில் தனது முதல் படத்தில் நடித்த நட்டாலி போர்ட்மன், குழந்தைகள் எந்தத் துறையிலும் வேலை செய்யக்கூடாது, அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் திரையுலகிற்குள் நுழையவே கூடாது எனக் கூறவில்லை, ஆனால் இளம் வயதில் இது வேண்டாம் எனக் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →