4ம் நாள் போர் நிறுத்தம்: 200 பேர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு!
இஸ்ரேல் - காஸா இடையிலான போர் நிறுத்தத்தின் 4ஆம் நாளான இன்று (நவ. 27) 50 பிணைக்கைதிகள், 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - காஸா இடையிலான போர் நிறுத்தத்தின் 4ஆம் நாளான இன்று (நவ. 27) 50 பிணைக்கைதிகள், 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
4 நாள்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், 3வது நாளான நேற்று ஹமாஸ் படையினர் 4 வயது அமெரிக்க சிறுமி உள்பட 17 பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதில் தாய்லாந்து நாட்டினர் 3 பேர், ரஷிய குடியுரிமை பெற்றவர் ஒருவர்.
இதேபோன்று இஸ்ரேல் ராணுவம் 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பிணைக்கைதிகளையும், சிறைபிடித்தவர்களையும் அவரவர் நாடுகளுக்குச் செல்ல உதவியது.
போர் நிறுத்தத்தின் 4ஆம் நாளான இன்று, 50 பிணைக்கைதிகள், 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சிறைபிடித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.