உலகம்

இத்தாலி: வெனிஸ் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.

DIN

ரோம்(இத்தாலி): இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மார்கெராவுக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு, ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து முழுதும் சாலையை விட்டு விலகி விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர், 18 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ்ருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பேருந்து விபத்துக்கான காரணம் தெரியவில்லை. "விபத்தில் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT