உலகம்

ஆப்கனில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!!

ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சனிக்கிழமை பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறையே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் வீட்டைவிட்டு தெருக்களில், சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

முன்னதாக ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் கடந்த செப். 4 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னர் இந்தியாவின் தலைநகர் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

SCROLL FOR NEXT