அமெரிக்காவில் 6 வயது பாலஸ்தீன சிறுவன் குத்திக் கொலை! மத வெறுப்பால் 26 முறை குத்தப்பட்டார்
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 வயது பாலஸ்தீனிய சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்அமெரிக்காவில் 6 வயது பாலஸ்தீன சிறுவன் குத்திக் கொலை! மத வெறுப்பால் 26 முறை குத்தப்பட்டார்
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 வயது பாலஸ்தீனிய சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 வயது பாலஸ்தீன சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவிற்கு அருகிலுள்ள ப்ளைன்ஃபீல்டில் பாலஸ்தீன-அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் நுழைந்த நில உரிமையாளரான 71 வயது முதியவர் ஜோசப் ஸூபா என்பவர், தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு பெண் மற்றும் அவரது மகன் மீதும் சரமாரியாக குத்தியுள்ளார். உடனே இதுகுறித்து அந்த பெண், வில் கவுன்ட்டி காவல் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த பெண் மற்றும் சிறுவனுக்கு பல்வேறு இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பதைக் கண்டனர். உடனடியாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் சிறுவன் பலியானான். இறந்த சிறுவனுக்கு 26 இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் ஜோசப் ஸூபா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியானது 31 செ.மீ. நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்போது நிலவி வரும் மோதல் எதிரொலி காரணமாகவே அவர்கள் குறிவைக்கப்பட்டதாக வில் கவுன்ட்டி காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கொடூரமான வெறுப்பு செயலுக்கு அமெரிக்காவில் இடமில்லை. அமெரிக்கர்களாகிய நாம் ஒன்று கூடி இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அனைத்து வகையான மதவெறி மற்றும் வெறுப்பையும் நிராகரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.