உலகம்

சீனாவில் புதின்! ஷி ஜின்பிங்குடன் முக்கிய ஆலோசனை

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் விளாதிமீா் புதின், அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.

DIN

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் விளாதிமீா் புதின், அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 600 நாள்களை கடந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உதவும் நிலையில், ரஷியாவுக்கு சீனாவும், வடகொரியாவும் ஆதரவளித்து வருகின்றன.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஐநாவின் எச்சரிக்கையை மீறியும் நடைபெற்று வருவதால், புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதனால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த புதின், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு கடந்த வாரம் முதல்முறையாக கிர்கிஸ்தான் பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது சீனா சென்றுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேல் - காஸா இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் புதின் - ஷி ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ செயல்படுத்துவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டத்தில் 130 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், புதின் இன்று கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து, புதன்கிழமை காலை சீன அதிபரை சந்திக்கும் புதின், போர் குறித்தும், ரஷியாவுக்கான பொருளாதார உதவிகள் குறித்து முக்கிய  ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த மாதம் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT