உலகம்

போர் எதிர்ப்பாளர்களுக்கு இஸ்ரேல் காவல்துறை தலைவர் மிரட்டல்!

DIN

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டிலும் அத்தகைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று (அக். 18) காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஒரு பேரணி நடைபெற்றது. அதனை இஸ்ரேல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போரை எதிர்ப்பவர்களை மிரட்டும் வகையில் இஸ்ரேல் காவல்துறை தலைவர் கோபி ஷபாதி பேசிய விடியோ செய்திகளில் வெளியாகி உள்ளது.

அந்த விடியோவில் அவர், “காஸாவுடன் போர் வேண்டாம் என்றோ, காஸாவுக்கு ஆதரவாகவோ யாரேனும் பேசினால் அவர்களை காஸாவுக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி விடுகிறேன். அங்கு சென்று அவ்வாறு பேசிக் கொள்ளட்டும். இஸ்ரேலில் காஸாவுக்கு ஆதரவாக பேசுவதை அனுமதிக்க முடியாது” எனப் பேசியுள்ளார்.

அமைதியை விரும்பி போரை எதிர்ப்பவர்களை காவல்துறை தலைவர் இவ்வாறு கடுமையாகப் பேசியுள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT