உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

DIN


இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் - குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அக்டோபர் 7ஆம் தேதிமுதல் போர் நடைபெற்று வருகிறது. 3 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். 

வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் - ஹமாஸ் போரின் 2ஆம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவிக்கிறார். 

இந்நிலையில், காஸாவில் மட்டும் 7,703 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை உள்ளது. காஸாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT