உலகம்

இஸ்ரேலுக்கு இங்கு இடமில்லை: சீன நிறுவனங்களின் நடவடிக்கை!

DIN

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்  வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சீனாவின் சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு வலுவாக பேசப்பட்டு வருகிறது.  ஜெர்மனி, யூதர்களுக்கு என்ன செய்ததோ அதையே இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு செய்து வருகிறது என சீனாவின் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை. 

லக்ஸம்பெர்க் உள்ளிட்ட சிறிய பகுதிகளுக்கே தெளிவான பெயர் குறிப்பு இருக்கும்போது இஸ்ரேல் பெயர் இல்லை என்பது இஸ்ரேல்-பாலஸ்தீன போரின் விளைவாகத் தான் என்பதை அறிய முடிகிறது.

இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT