உலகம்

திருடப்பட்ட காரை மீட்க உதவிய கூகுள் செயலி: எப்படி நடந்தது இது!

DIN

இங்கிலாந்து பர்மிங்காமைச் சேர்ந்த 23 வயதான ஜே ராபின்சன், அக்.27 காலையில் வேலை நிமித்தமாக வீட்டில் இருந்து வெளியே கிளம்ப வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இரண்டு கார்களும் திருடப்பட்டிருந்தன.

சீட் ஸ்போர்ட் கார் மற்றும் போக்ஸ்வேகன் கோல்ஃப் மாடல் கார் ஆகிய அவரது இரண்டு கார்களையும் வீட்டிற்குள் புகுந்து அவற்றின் சாவியை எடுத்து திருடி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவரது சீட் மாடல் காரின் புகைப்படம் ஒன்றை தற்செயலாக ஸ்னாப்சாட் தளத்தில் கண்டுள்ளார் ஜேயின் நண்பர் ஜேமி. 

இதற்கிடையில் காரைத் திருடிய நபரிடமிருந்து 2000 பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூபாய் 2,00,000) கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. காவலர்கள் நடவடிக்கை திருப்தி தராத நிலையில் இளைஞர்கள் இருவரே காரைத் தேட தொடங்கியிருக்கின்றனர்.

ஜேமி, அந்தப் புகைப்படத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டிடத்தைக் படங்களை உள்ளிட்டு தேடும் செயலி வழியாக தேடியதில் அந்தக் கட்டிடத்தைக் கண்டறிந்துள்ளனர். கட்டிடத்தின் அருகே இருந்த குப்பை தொட்டியில் பொறிக்கப்பட்டிருந்த வீட்டுத் தோட்டத்தின் அந்த இடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

கூகுள் எர்த் செயலி தெருவைச் சரியாகக் கண்டறிய உதவியிருக்கிறது. இந்த செயலி உலகின் வரைப்படத்தை செயற்கைக்கோள் படங்களாகக் காட்டக் கூடியது.

உடனே காவலர்களுக்கு இதனை தெரியப்படுத்த அந்தக் கார் அங்கிருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட காரின் மதிப்பு 23,000 பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.23,00,000)

16 லட்சம் மதிப்புள்ள மற்றொரு கார் இன்னும் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

அமைதிக்கான நேரம்! தன்வி ராம்..

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT