உலகம்

டயானா காதலரின் தந்தை முகமது அல் ஃபயீத் காலமானார்! 

எகிப்து தொழிலதிபரும், ஹரோட்ஸ் முன்னாள் உரிமையாளருமான முகமது அல் ஃபயீத் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

DIN

எகிப்து தொழிலதிபரும், ஹரோட்ஸ் முன்னாள் உரிமையாளருமான முகமது அல் ஃபயீத் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

பிரிட்டன் முன்னாள் இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தை முகமது அல் ஃபயீத்(94). வயது மூப்பு காரணமாக  ஆகஸ்ட் 30-ம் தேதி காலமானார். ரீஜண்ட்ஸ் பார்க் மசூதியில் இவரது உடல் வைக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பின்னர், 226 ஏக்கர் கொண்ட குடும்ப கல்லறையில் தனது மகன் டோடியின் கல்லறைக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முகமது, பாரிஸில் உள்ள ரிட்ஸ் உணவகம் மற்றும் பிரீயர் லீக் கிளப் புல்ஹாமின் தலைவராக இருந்தவர். 

இவர் 1954ல் சமிரா கஷோகியை மணந்தார். பின்னர் எகிப்தில் கப்பல் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஆயுத வியாபாரியான அட்னான் கஷோகி நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் நிதி ஆலோசகராகவும் இருந்தவர். 

முகமது-சமிரா கஷோகி தம்பதிக்கு டோடி என்ற மகன் இருந்தார். 1985ல் ஹெய்னி வாதேமையுடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமிலா, ஓமர், ஜாஸ்மின் மற்றும் கரீம் உள்பட நான்கு குழந்தைகள் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT