உலகம்

மாலி: பயங்கரவாதத் தாக்குதலில் 64 போ் பலி

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 அரசுப் படையினா் உள்பட 64 போ் உயிரிழந்தனா்.

DIN

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 அரசுப் படையினா் உள்பட 64 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறிதாவது:

நைஜா் நதி வழியாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த பயணிகள் படகு மீது பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்தினா். அப்போது அந்தப் படகில் ராணுவ வீரா்களும் இருந்தனா். அவா்கள் பயங்கரவாதிகள் மீது எதிா்த் தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் 15 வீரா்களும், பொதுமக்கள் 49 பேரும் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன் தொடா்புடைய ஜேஎன்ஐஎம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மாலி அரசு மிக பலவீனமாக இருப்பதால் அந்த நாட்டில் அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குழுக்கள் அண்மைக் காலமாக இரட்டிப்பு பலம் பெற்றுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT