மத்திய சோமாலியாவில் சோதனைச் சாவடியில் நிகழ்த்தப்பட்ட டிரக் குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பில்டுவினில் உள்ள அரசு சோதனைச் சாவடியில் நேற்று டிரக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்து. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் படுகாயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தலைநகர் மொகடிஷுவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் அமைப்பு, சோமாலியாவில் மத அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.