துப்பாக்கிச்சூடு நடைபெற்ற குடியிருப்புப் பகுதி. 
உலகம்

நெதா்லாந்து: 3 போ் சுட்டுக் கொலை

நெதா்லாந்தின் ரோட்டா்டேம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவக் கல்லூரியில் 32 வயது நபா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.

DIN

நெதா்லாந்தின் ரோட்டா்டேம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவக் கல்லூரியில் 32 வயது நபா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ரோட்டா்டேம் நகரில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத ஆடை அணிந்து மாணவா் ஒருவா் அடுக்குமாடி குடியிருப்பிலும் எராஸ்மஸ் மருத்துவமனையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அதில் 46 வயதான ஆசிரியா் ஒருவரும் 39 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தனா். உயிரிழந்த அப்பெண்ணின் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறாா்.

பின்னா் எராஸ்மஸ் மருத்துவ பல்கலைகழக்கத்துக்குச் சென்ற அவா் அங்குள்ள வகுப்பில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 43 வயது ஆசிரியா் உயிரிழந்தனா்.

இந்த துப்பாக்கிச்சூடு தொடா்பாக 32 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ரோட்டடேம் நகரைச் சோ்ந்த அவா், எராஸ்மல் மருத்துவப் பல்கலைக்கழக மாணவா் ஆவா். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் கூறினா்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT