12 வயது மாணவர் கையில் துப்பாக்கி: சக மாணவர்கள் காயம்!
பள்ளி பரபரப்பு: 3 மாணவர்கள் காயம், குற்றவாளி கைது!
தெற்கு பின்லாந்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் 12 வயது மாணவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக அப்பகுதி காவலர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் காயமுற்றுள்ளனர்.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர் சக மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி உபயோகித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 800 பேர் படிக்கும் பள்ளியை காவலர்கள் சுற்றி வளைத்தனர்.
இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
துப்பாக்கி உபயோகித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி பயன்படுத்திய மாணவரும் காயமுற்றவர்களும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.