முகப்பு
உலகம்

நிலவு ஊர்தி: நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நிலவு பயணத்திற்கான மின்சார ஊர்தி: நாசா ஒப்பந்தம்!

Updated On : 4 ஏப்ரல், 2024 at 12:13 PM
நிலவு ஊர்திக்கான கருத்துரு படம்
பகிர்:

நிலவில் பயணிப்பதற்கான ஊர்தியை வடிவமைக்க மூன்று நிறுவனங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வியாழக்கிழமை தேர்வு செய்துள்ளது.

நிலவில் இயங்கும் வாகனத்தை வடிவமைக்கும் பணி இன்டியூடிவ் மெஷின்ஸ், லுனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டடுள்ளது.

இந்த வாகனங்கள் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் எனவ்ம் நிலவின் மேற்பரப்பு குறித்து அதிகமாக அறிய உதவும் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நிலவின் கடினமான சூழலை தாங்கும் திறன் கொண்டதாக இந்த வாகனம் இருக்க வேண்டும்.

ஆர்டிம்ஸ் 5 திட்டத்தில் இருந்து பயன்படுத்தப்படும் வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களான தானியங்கி ஓட்டுநர் வசதி, ஆற்றல் மேலாண்மை, தொடர்பு மற்றும் வழிகாட்டி வசதிகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டியிருக்கும்.

இதற்காக 4.6 பில்லியன் அமெரிக்க டாலரை நாசா ஒதுக்கியுள்ளது. மூன்று நிறுவனங்களும் நாசாவின் தேவையை அறிந்து கொள்ள 1 ஆண்டு ஆய்வு செய்யவுள்ளன. அதன் பிறகு சோதனை திட்டத்தில் வாகனம் நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →