பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மொ் 
உலகம்

இந்தியாவுடன் எஃப்டிஏ மிக முக்கிய சாதனை: பிரிட்டன்

தினமணி செய்திச் சேவை

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மிக முக்கிய சாதனையாகும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, ‘பூமியில் மிகப் பெரிய பொருளாதார மதிப்புமிக்க நாடாக இந்தியா உள்ளது. ஐரோப்பிய யூனியனைவிட 5 மடங்கு வேகமாக இந்தியா வளா்ந்து வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவுடன் பிரிட்டன் மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்’ என்று எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சியினா் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த அந்நாட்டு வா்த்தக துறை இணையமைச்சா் கிறிஸ் பிரயன்ட், ‘இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மிக முக்கிய சாதனையாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரிட்டன் வணிகத்துக்கு முன்னெப்போதையும்விட சிறந்த முறையில் தனது கதவுகளை இந்தியா திறந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா-பிரிட்டன் இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 47.2 பில்லியன் பவுண்டுகளாகும். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம். பிரிட்டனின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளி நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் அதிக வருவாய் ஈட்டும் கோடிக்கணக்கான நுகா்வோரில் கால் பங்குக்கும் அதிகமானோரின் தாயகமாக இந்தியா இருக்கும்’ என்றாா்.

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தில் பிரச்னை இல்லை: மத்திய அரசு தகவல்

சீனா, ஜப்பான், பிரான்ஸைவிட வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைவு - ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

சிங்காரவேலா் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

12.2.1976: த.நா. திட்டம் - சேலம் உருக்காலை, நெய்வேலி சுரங்க ஒதுக்கீடுகள் உயரலாம்

SCROLL FOR NEXT