உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய நிகழ்த்திய தாக்குதல்களில் 10 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
அதன்படி, ஏவுகணைத் தாக்குதல்களில் தெற்கு நகரமான சபோரிஜியாவில் நான்கு பேர் பலியாகினர். மேலும் 23 பேர் காயமடைந்தனர் என்று ஜபோரிஜியா ஆளுநர் இவான் ஃபெடோரோவ் கூறினார். இந்த தாக்குதலில் 24 தனியார் வீடுகள் மற்றும் ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 40க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்று மேயர் இகோர் டெரிகௌவ் கூறினார். ரஷியா ஆறு ஏவுகணைகள் மற்றும் 32 ஷஹீத் ரக ட்ரோன்களை சனிக்கிழமை இரவு உக்ரைனில் ஏவியது என்று உக்ரைன் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலிசக் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மூன்று ஏவுகணைகள் மற்றும் 28 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. கிவ் பகுதியும் ரஷியாவால் குறிவைக்கப்பட்டது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கிவ் பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.