Yuki IWAMURA
உலகம்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரை உலுக்கிய நிலநடுக்கம்

அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதிகளை நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.

அசோசியேட் பிரஸ்

அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை லட்சக்கணக்கானோர் உணர்ந்த நிலையில் நல்வாய்ப்பாக அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கம், அமெரிக்காவின் நியூயார்க், பிலடெல்பியா நகரங்களில் இருக்கும் வானளாவிய கட்டடங்களை உலுக்கியதோடு நில்லாமல், நியூ இங்கிலாந்து வரை இதன் தாக்கம் இருந்துள்ளது. இப்பகுதிகளில் லட்சக்கணக்கானோர் நிலநடுக்கத்தை உணர்ந்திருந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையம், நியூ ஜெர்சியின் வெள்ளைமாளிகை நிலையம் அருகே அல்லது நியூயார்க் நகருக்கு மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இது 4.8 என்ற அளவுக்கு ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பால்டிமோர் முதல் பாஸ்டன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், பாதுகாப்புக் கருதி அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். சேதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசைதிருப்பப்பட்டதுடன், சில விமானங்கள் தாமதமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பிலடெல்பியா பகுதியில் இயங்கி வரும் பயணிகள் ரயில் சேவை, நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக சேவை நிறுத்தப்பட்டது. சில வீடுகளில் அலமாரிகளில் இருந்து பொருள்கள் கீழே விழுந்துள்ளன.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், பலரும் கட்டடங்களுக்குள் இருந்து அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

இளைஞா்களுக்கு மகாத்மா காந்தியை பற்றி கூற வேண்டும்: பாரதி பாஸ்கா்

SCROLL FOR NEXT