ஜிபூட்டி: படகு விபத்தில் 38 அகதிகள் உயிரிழப்பு
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:15 PM
நைரோபி: வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக அகதிகள் யேமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதியிலிருந்து 22 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மேலும், இந்த விபத்தில் மாயமான 6 அகதிகளை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
Advertisement