முகப்பு
உலகம்

அயா்லாந்தின் மிக இளைய பிரதமா் தோ்ந்தெடுப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:26 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:15 PM

லண்டன்: அயா்லாந்தின் மிக இளைய பிரதமராக 37 வயது சைமன் ஹாரிஸ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகின.

இதுவரை பிரதமராக இருந்துவந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து சைமன் ஹாரிஸ் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகா் டூப்ளினில் உள்ள அதிபா் மாளிகையில் சைமன் ஹாரிஸ் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டாா்.