உலகம்

போர்ப் பதற்றம் காரணமாக விமான சேவை நிறுத்தம்!

விமான சேவையை நிறுத்தம்: லுப்தான்சா அறிவிப்பு

DIN

ஜெர்மானிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கான விமான சேவையை சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது.

ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக வியாழக்கிழமை வரை அறிவிக்கப்பட்டிருந்த விமான சேவை ரத்து, தற்போது சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

லுப்தான்சாவின் துணை விமான நிறுவனமான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் தெஹ்ரானுக்கு விமானங்கள் இயக்குவதை தொடர்கிறது. வியன்னாவில் இருந்து தெஹ்ரான் குறுகிய நேரம் என்பதாலும் பகல் பொழுதில் விமானங்கள் இயங்கும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல், ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் அதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்ததும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

தமிழகத்துக்கு தொடர்ந்து 8வது முறை சிறந்த உடலுறுப்பு தானத்துக்கான விருது!

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!

பண்டிகை காலம் ஆரம்பம்... நிகிதா!

ஐசிசி ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT