எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண் (கோப்புப் படம்) ஏ.பி.
உலகம்

மீண்டும் தட்டம்மை பரவல்?

அமெரிக்காவில் தட்டம்மை அதிகரிப்பு: சிடிசி அறிக்கை

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்காத்து கொள்ள முடிகிற நோய்களில் ஒன்றான தட்டம்மை உலகளவில் பார்க்கும்போது அதிகம் தொற்றும்தன்மை கொண்டது.

பல நேரங்களில் மோசமான விளைவுகளை அளிக்கும். இதற்கான தடுப்பு என்பது தடுப்பூசி போடுவதுதான்.

குழந்தைகளை எளிதில் தாக்கும் தட்டம்மை, முப்பது ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 2019-ல் அமெரிக்காவில் பெரியளவில் ஏற்பட்டது.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் முன்தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட குறிப்பில் ஏப்ரல் 5 வரை 113 பேர் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளது. 7 பகுதிகளில் இந்த தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது வருடத்தின் தொடக்க மாதங்களில் இந்தளவு அதிகமாக தொற்று ஏற்பட்டிருப்பது அபாயமானது என்கிறார்கள் நோய்த் தடுப்பு வல்லுநர்கள். 17 மடங்கு அதிகம் என்பதே பதைபதைப்புக் காரணம்.

தட்டம்மை உள்ளவர்கள் தும்மினாலோ இருமினாலோ அவர்களிடமிருந்து நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவும். காற்றில் 2 மணி நேரம் வரை நோய்க்கிருமிகள் அழியாமல் இருக்கும். 10-ல் 9 பேர் இந்த நோயினால் பாதிக்கக் கூடியவர்களாக உள்ளதாக சிடிசி தெரிவிக்கிறது.

எம்எம்ஆர் தடுப்பூசி இதற்கு தகுந்த நிவாரணமாக இருக்குமெனவும் இரண்டு தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசி 95 சதவீதம் காக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT