உலகம்

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

சீனாவை தாக்கிய புயலுக்கு 5 பேர் பலியாகினர்.

DIN

தெற்கு சீனாவில் உள்ள குவாங்செளவை நகரை தாக்கிய புயலுக்கு 5 பேர் பலியாகினர். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாக என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

141 தொழிற்சாலை கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலைத் தொடர்ந்து, தெற்கு சீனாவில் பல நாள்களாக பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குவாங்சௌவில் ஏப்ரலில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கனமழை மற்றும் பலத்த புயல்களின் தாக்குதல் இந்த மாத இறுதி வரை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT