காஸாவில் வான்வழித் தாக்குதல் 
உலகம்

பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 60 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை..

ANI

காஸாவில் உள்ள பள்ளி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு காஸாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்கதல் நடத்தியதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் உள்ள பள்ளிகளில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமிட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வான்வழித் தாக்குதலில் 50 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 564 பள்ளிகளில் 477 பள்ளிகள் நேரடி தாக்குதலுக்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

காஸாவின் போருக்கு முன்னர் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல்களிலிருந்து தப்பிக்க மக்கள் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலானோர் காஸா கடற்கரையில் கூடார முகாம்களில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT