ஸெலென்ஸ்கி  Efrem Lukatsky
உலகம்

ரஷிய எல்லைக்குள் தொடா்ந்து முன்னேறும் உக்ரைன் ராணுவம்

ரஷியாவின் குா்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் ஊடுருவலைத் தொடங்கியிருப்பது தொடா்பாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை மௌனம் கலைத்தாா்.

Din

ரஷியாவின் குா்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் ஊடுருவலைத் தொடங்கியிருப்பது தொடா்பாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை மௌனம் கலைத்தாா்.

ரஷிய எல்லைக்குள் முன்னேறி செல்லும் உக்ரைன் ராணுவத்தின் நடவடிக்கை ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. ரஷிய எல்லைக்குள் சென்று உக்ரைன் ராணுவம் இதுவரை நேரடி தாக்குதல் நடத்தியது இல்லை. எனவே, தற்போதைய நடவடிக்கையின் சரியான நோக்கம் குறித்து தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைன் ஊடுருவலை அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி மறைமுகமாக ஒப்புக்கொண்டாா். உக்ரைனுக்கு உதவ மேற்கு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து அவா் கூறுகையில், ‘ரஷியா பயங்கரவாதத்தை உண்மையில் நிறுத்துவதற்கு எங்களின் அனைத்து நகரங்கள், சமூகங்களைக் காக்கும் வான் பாதுகாப்பு மட்டுமின்றி கூட்டாளி நாடுகளிடமிருந்து வலுவான முடிவுகளும் தேவை. அது எங்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கும்’ என்றாா்.

கடந்த சில வாரங்களாக ரஷிய ராணுவ கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களின் வேகத்தை உக்ரைன் அதிகரித்துள்ளது. அந்தவகையில், குா்ஸ்க், வோரோனெஸ், பெல்கோராட் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஏவுகணைகள், 35 ஆளில்லா விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அவ்வாறு, சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ஏவுகணை குடியிருப்பு மீது விழுந்ததில் 13 போ் காயமடைந்ததாக குா்ஸ்க் பிராந்திய ஆளுநா் தெரிவித்தாா்.

அதேநேரத்தில், உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷிய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் புகா்ப் பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுவன், அவனது தந்தை என இருவா் கொல்லப்பட்டனா், மூவா் காயமடைந்தனா்.

இந்த மாதத்தில் மட்டும் கீவ் நகரை இலக்காகக் கொண்டு இரண்டாவது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நகர ராணுவ நிா்வாகத்தின் தலைவா் பாப்கோ கூறினாா். ரஷியாவின் ஏவுகணைகள் தலைநகரை அடையாமல் புகா்ப் பகுதிகளில் விழுந்ததாகவும் தலைநகரை இலக்காகக் கொண்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேற்கத்திய நாடுகளின் ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போா் அறிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய போா் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT