ஜொ்மனியில் நகர ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாா்த் ரைன்-வெஸ்ட்ஃபிலா மாகாணம், சோலிங்கன் நகரில், அந்த நகரின் 650-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
அதையொட்டி, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஃபிரான்ஹாஃப் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் கூடியிருந்தனா். அப்போது அங்கிருந்தவா்களை ஒரு நபா் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.40 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1.10 மணி) சரமாரியாக கத்தியால் குத்தினாா்.
இதில் 3 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்; காயமடைந்தவா்களில் 5 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திய நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.
இந்தத் தேடுதல் வேட்டையின்போது ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இந்தத் தாக்குதலுடன் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாரை மேற்கோள்காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.