பேருந்து மீது துப்பாக்கிச் சூடு 
உலகம்

பாகிஸ்தான் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு: பயணிகள் 23 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயணிகள் 23 பேர் பலியாகினர்.

PTI

கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பேருந்து மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினர்.

இதில் விநோதம் என்னவென்றால், பேருந்தை நிறுத்திய மர்ம நபர், அனைவரையும் பேருந்திலிருந்து இறக்கி அவர்களது அடையாளங்களை உறுதி செய்துகொண்ட பிறகு, அனைவரையும் சுட்டுககொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் மர்ம நபரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

பலோசிஸ்தானின் முசாகேல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, பேருந்து வழியில்லாமல் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பேருந்துக்குள் ஏறியிருக்கிறார்.

துப்பாக்கி முனையில் அனைவரைன் அடையாளங்களையும் அவர் உறுதிசெய்துகொண்ட பிறகு, அவர்களை பேருந்திலிருந்து இறங்கி கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளார்.

அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரியவரவில்லை. மத ரீதியிலான தாக்குதலாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபர் அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த 12 வாகனங்கள் மீதும் துப்பாக்கியால் தாக்கியதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீடு அறிவிப்பு!

சீனாவில் மோடி - புதின் ஒரே காரில் பயணம்!

ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 250 பேர் பலி?

பஞ்சாபில் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

SCROLL FOR NEXT